கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 September, 2013

மன்னிக்கனும் தலைவா..! என் விமர்சனத்தை திரும்பப்பெறுகிறேன்...!


கடந்த மாதம் ரம்ஸான் அன்று (09-08-2013) விஜய் நடித்த தலைவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிப்புகள் வந்தது. ஆனால் சில அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக படம் தமிழில் வெளிவரவில்லை.. ஆனால் மற்றமொழிகளில் படம் வெளிவந்தது...

தலைவா படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் நானும் நண்பர்களும் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு சென்று தலைவாவை தெலுங்கு மொழியில் படத்தை பார்த்துவிட்டுவந்து அன்று மறுநாள் தலைவா விமர்சனம் எழுதினேன்..!

சரி அதற்கு என்னவென்று நீங்கள் கேட்கலாம்... ஒன்றுமில்லை.. படம் கதை சரியில்லையென்றும், படம் ஒன்றும் வேலைக்காகாது என்று எதிர்மறைக்கருத்தை என்னுடைய விமர்சனமாக வெளியிட்டேன்.

அன்றிலிருந்து இன்றுவரை மிகவும் பலத்த எதிர்ப்பு கிளம்பிவருகிறது. நீ எப்படி எங்கள் படத்தை விமர்சிக்கலாம்.. சினிமாவைப்பற்றி உனக்கு என்ன தெரியும்..? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா...? முடிந்தால் மோதிபார்...? ஒத்தைக்கு ஒத்தைவறீயா...? என்றும், அவன் இவன் என்றும் மரியாதைக்குறைவாகவும், மிகவும் கீழ்தரமாக இறங்கி அவர்களின் உண்மைமுகத்தை  ஊருக்கு காட்டிவருகிறார்கள்...! 



இந்த திரைப்படத்தை சார்ந்த.... நடிகர் விஜய், விஜய்யோட அப்பா  எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், அவங்க வீட்டுதோட்டக்காரன், அப்புறம் பக்கத்துவீட்டுக்காரன், இயக்குனர் விஜய், சந்தானம், இந்த படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்னும் பெயர் சொல்லமுடியாத யார்யாரே... அவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும்.. அதுமட்டுமல்லாமல் இரவு 11.00 மணி 12.00 மணிக்குகூட போன்பண்ணி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது.

சரி எதற்கு நமக்கு வம்பு என்று அந்த விமர்சன திரும்பப்பெற்று விடலாம் என்று முடிவெடுத்தப்பின்.... இன்று மறுபடியும் திரும்ப ஒரு விமர்சனத்தை எழுதவைத்துவிட்டார்கள்....

 

1. இந்த படத்தின் ஹீரோ விஜய் மிகப்பெரிய நடிப்பை தந்துள்ளார். அவர் நடித்தப்படங்களிலேயே இந்தப்படம் தான், ஒரு மன்னிக்கவும் பற்பல மைல்கல்கள்...! கண்டிப்பாக இந்த படத்தில் நடித்ததற்கு அவருக்கு ‌ஐந்தோ ஆறோ ஆஸ்கார் நிச்சயம் என்று பல்வேறுதரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

2. இயக்குனர் விஜய்... இந்த கதை இவரது வாழ்நாள் சாதனை.. இவர் இந்த படத்தை இயக்கியதின் மூலம் தன்னுடைய வாழ்நாள் சாதனையை முடிந்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். இப்படி ஒரு கதை பேரண்ட வரலாற்றில் இதுவரையாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

3. சந்தானம்..! செம காமெடிங்க இவருடையது... இவரு நடிச்ச படத்துல இருந்து நல்லபடம் எதுன்னுகேட்டா இதுன்னுதான் சொல்வார். இதை கவுண்டமனி-செந்தில் மேல சத்தியமா...? ஏம்பா..! கொஞ்சம் மரியாதையா பேச கத்துகிட்டா நல்லாயிருக்கும் நம்பி...

4. ஹீரோயின்... ஏதாவது சொல்லாமா... அமலாபால்...! இந்தபடத்துல அமலாபாலுக்கு அது ரொம்ப அதிகம் தெரியுமா... எதுவா..? அட.. வீரம்ங்க... விஜய்யை கைதுபண்ணி செம போலீஸ் வேடத்துல வற்றாங்க...

5. படம் இதுவரை இல்லாத அளவுக்கு பல்லாயிரம்கோடி வசூல் செய்து விட்டது... எடுத்த தியேட்டர்காரங்க இந்த படத்தை நிரந்தரமா தமக்கே எழுதிகொடுத்துடுங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்கலாம்...  படம் தியேட்டரில் பலவருஷம் ஓடவாய்ப்பிருக்கிறது. விரைவில் பவர்ஸ்டாரின் லத்திகா திரைப்படத்தின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்மாடி..! 

ஏம்பா தலைவா படக்குழு பாக்கியவான்களே... உங்க படத்தை நல்லாயிருக்குன்னு சொல்லிபுட்டேன். இனி நிம்மதியா போய் தூங்குங்க..  இனிமே பாருங்க இந்தியா, அமெரிக்கா, சிங்கபூர், மலேசியா போன்ற கோபால் பல்பொடி விற்கும் அனைத்து நாடுகளிலும் படம் செமையாக ஓடி வரலாற்று சாதனை செய்யபோகிறது.

அடக் கடவுளே...! படம் நல்லாயில்லேன்னு விமர்சனம் பண்ணேன். அதை அடுத்தப்படத்துல சரிபண்ணசொன்னா.. நாங்க எப்படி படம் எடுத்தோம் தெரியுமா..? அங்கிட்டுபோய் டூயட் எடுத்தோம்... இங்கிட்டு வந்து சண்டைகாட்சி எடுத்தோம்...? லைட்டை தூக்கிறவர் எப்படி தூக்கி கஷ்டப்பட்டாருன்னு உனக்கு தெரியுமா..? செட்டுபோட எவ்வளவு அலைஞ்சோம் தெரியுமா..? பட்ஜெட் வேற கையை கடிச்சது..! இப்படி கேட்டுகிட்டு கிளம்பிட்டிங்க..!

ஒரு சினிமா எடுக்குறது ரொம்ப கஷ்டம் தான் அதையாரும் மறுப்பதற்கில்லை.. அதற்காக படம்பார்க்கும்போது படத்தில் இருக்கும் குறைகளை சொல்லாமல்... படம் எப்படி எடுத்தாங்க, யாரு எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு போய்பார்த்துகிட்டா வரவாமுடியும்.... 2.30 மணிநேரம் ஓடுரபடத்தை வச்சிதான் விமர்சனம் செய்யமுடியும்.


இதுல மெயினான இயக்குனர்... தயாரிப்பாளர்... ஹீரோ.. என பலப்பேர் இருக்காங்க. அவங்க யாரும் வாயைதிறக்கவில்லை... இந்த சைடுங்கதாங்க ரொம்ப ஆடுதுங்க.... ஓ.. அப்பத்தான் அவங்க நாலுபேருகிட்ட நல்லபேர் வாங்கமுடியுமா...? தெரியல...!

அப்ப விஜய் & விஜய் இப்பபோய் நிம்மதியா தூங்குங்கப்பா...!

எதுக்கு பிரச்சனை... டிஸ்கி போட்டுடுவோம்..
 

டிஸ்கி 1 :  இதை படிக்கும் யாவரும் நகைச்சுவையோடு படியுங்கள்.. இது எதிர்பதிவோ அல்லது உள்குத்து பதிவோ அல்ல என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 2 : இந்தபதிவிலும் யார் மனதை புண்படியாக தகாதவார்த்தைகளையே, தரக்குறைவான சொல்லையோ பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

நாளைக்கு நல்ல கவிதையா போடுவோம்...

நல்லவங்க நாலுபேர் படிச்சாபோதும்...!

18 comments:

  1. பின்நவீனத்துவமாம். மறைமுகமா கலாய்க்கிறாராமாம். போய்யா யோவ். படம் நல்லாயில்லைனா நல்லாயில்லைன்னு சொல்லிட்டு போ. அதை விட்டுப்புட்டு பக்கத்து சீட்ல இருந்தவன் காத நோண்டுனான், முன் சீட்ல உக்கார்ந்து இருந்தவன் விசிலடிச்சான், தியேட்டர்ல வித்த சம்சா எண்ணெய்யா இருந்தது, ஒன்னுக்கு போற இடத்துல பல்பு எரிஞ்சதுன்னு சொல்றதுக்கு பேரு விமர்சனமா. எனக்கு எந்த பக்கமா சிரிக்கிறதுன்னு தான் தெரியலை

    நாங்க எல்லாம் சைடு அல்லக்கையாவே இருந்துட்டு போறோம், அதுல ஒரு பிரச்சனையும் எங்களுக்கு இல்லை. இந்த ஏத்தி விடுறது, பக்கத்து வீட்டு பாத்திரத்தை கிண்டி விடுறது இதெல்லாம் வேற எங்கயாவது போய் வச்சிக்க பிரதர்.

    இந்த பதிவை கூட நீங்க ஹிட்ஸூக்காகத்தான் போட்டு இருக்கீங்கன்னு ப்ளாக் படிக்கிற சின்னப்புள்ள கூட சொல்லும். இதுல நான் அந்த அர்த்தத்துல சொல்லல, இந்த அர்த்தத்துல புரிஞ்சிக்கிட்டீங்கன்னு வியாக்கியானம் வேற.

    ReplyDelete
    Replies
    1. நான் ஒன்னு சொல்லலாமா? ஏன் இந்த கொல வெறி.. அவங்கவங்க அவங்கவங்க வேலையைப் பார்க்கலாமே...ஹி...ஹி...!!!

      ஒரே குடும்பத்துல இருக்கிறவங்க சட்டைப் பிடிச்சுட்டு நடுவீதி சண்டைப் போட்டுகிட்ட மூணாவது மனசன் விலக்கி விடுற காலம் இல்லை.. நல்லா சண்டை போட்டுக்கிட்டும் இன்னும் ஏத்தி விடுவானுங்க..

      சண்டைப்போட்டுகிட்டவனுங்க சேர்ந்துகிட்டாலும்... அதையே சொல்லி சொல்லி ரெண்டுபேர் மூஞ்சியிலயும் காரித்துப்புவானுங்க...


      தேவையில்லாம மூணாவது மனுசனங்களை நாம ஏன் உள்ள நுழைய விடணும்...

      நாலு சுவத்துக்குள்ளயே சண்டை போடலாம்.. தப்பில்ல...நாலுபேருக்குத் தெரியவேணாமேன்னு தான் சொல்றேன்.. இத்தோட நிறுத்திங்கண்ணே...

      (ரெண்டுபேருக்கும்தான் இது அட்வைஸ் இல்லன்னே...ஆதங்கம்.. நல்லா இருந்த பயபுள்ளக இப்படி ஆகிட்டாங்களேன்ற வருத்தம்)

      நினைச்சுப்பார்த்தால்.. இந்த கருத்து சண்டையில கூட எந்த பிரயோசமும் இல்லை...அதனால் தான் சொல்றேன்...

      Delete
    2. /////
      இந்த பதிவை கூட நீங்க ஹிட்ஸூக்காகத்தான் போட்டு இருக்கீங்கன்னு ப்ளாக் படிக்கிற சின்னப்புள்ள கூட சொல்லும்./
      /////////

      பதிவை ஹிட்ஸ்க்காக போடாம
      நாமலே படிச்சிக்குறதுக்கா போடுறோம்....

      நாங்க என்ன திருட்டுதனமா பதிவை ஹிட்பண்ண 30, 40 ஓட்டா வச்சிகிட்டு இருக்கோம்...

      இப்படி தலைப்புல ட்வீட்ஸ் ரசிகர்களை படிக்கவைக்கிறோம்....

      ஹிட்ஸ்க்கு பதிவு போடாத ஆள் யாராவது இருக்கிறீங்களாப்பா..?

      Delete
  2. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன...
    மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்-கோட்டை
    வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்...
    பன்றி செயிர்வழ மாகுதல் இன்று...

    நாலடியார் 358

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப இலக்கியவாதியா மாறீட்டிங்க போல....

      செழிப்பாக வாழ நல்வாழ்த்துக்கள்...!

      Delete
    2. புரியல!கொஞ்சம் பொருளையும் சொல்லிப்போடுங்க அண்ணாச்சி!

      Delete
  3. ஓஓஓஓ....தங்கிலிஷ் கமெண்ட்....ஆகாதா...???
    இதோ தமிழ் கமெண்ட்.....

    @செந்தில்...
    அப்படியே திரும்பி அந்த காத்த திறந்து விட்டுட்டு போம்...

    ஆமா நேத்திக்கு நீ என்ன சாப்பிட்ட????

    நான் அந்த ஏற் கூலர்-ஐ சொன்னேன்.....


    சவுந்தர்....கமெண்ட்-ஐ நீக்குற அளவுக்கு...
    கீழ்தரமானவனா....நீர்???

    அப்ப கமெண்ட் பாக்ஸ் மூடு....இனி இருக்குடி....கச்சேரி....

    ReplyDelete

  4. Your comment will be visible after approval.////

    ம்ம்ம்...இது...அழகு...
    நான் எனக்கு சொல்லிக்கிட்டேன்...

    ReplyDelete
  5. திரும்பவும் முதல்லேருந்தா.....

    ReplyDelete
  6. நாராசமான சில பதிவர்களின் கருத்துக்களை படித்து மற்றவர்கள் முகம் சுளிக்ககூடாது என்பதற்காக Comments Moderation வைத்திருக்கிறேன்...

    விட்டா மீன்கடையா மாத்திடுவாங்க...
    அம்புட்டு நல்லவங்க அவங்க...

    ReplyDelete
  7. வணக்கம் பாஸ்

    சபா முடியலட சாமி ...

    ReplyDelete
  8. \\நடிகர் விஜய், விஜய்யோட அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், அவங்க வீட்டுதோட்டக்காரன், அப்புறம் பக்கத்துவீட்டுக்காரன், இயக்குனர் விஜய், சந்தானம், இந்த படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்னும் பெயர் சொல்லமுடியாத யார்யாரே... அவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும்.. அதுமட்டுமல்லாமல் இரவு 11.00 மணி 12.00 மணிக்குகூட போன்பண்ணி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது.\\ இவங்க எல்லாம் நீர் எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கனுமா?!! உம்ம ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா?

    ReplyDelete
  9. அன்புடையீர்... நமக்குள்ளே பேதங்கள் எதற்கு?...
    குருவி கட்டும் கூண்டுக்குள்ளே குண்டு வைக்கலாமா?... நாமெல்லாம் சண்டையிட்டால் எறும்புதான் கரும்பு திங்குமா?... இல்லை... சர்ப்பம்தான் கர்ப்பம் தரிக்குமா?...///

    அண்ணே... லெஸ் டென்ஷன் மோர் வொர்க்... மோர் வொர்க் லெஸ் டென்ஷன்ண்ணே...

    ச்சே... இந்த சினிமா ரொம்பதான்யா படுத்துது!!!

    சௌந்தர் பிரதர் எல்லாத்தையும் மறந்து விட்டுத்தள்ளி கூடிய சீக்கிரமே நல்லதொரு கவிதையைப்போட்டு முடித்து வையுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்...

    ReplyDelete
  10. அடிச்சிகிறீங்க ! ம் பரவாயில்லை .கொஞ்சம் அசிங்கத்தை குறைசிக்கலாமே

    ReplyDelete
  11. உங்களுக்கும் விமர்சன பதிவுகளுக்கும் நீண்ட தூரம்.
    உங்களுக்கு தெரிந்த கவிதையிலேயே கவனம் செலுத்துவது நன்று

    ReplyDelete
  12. நமக்குள் எதுக்குப்பா சண்டை?, சகோதரயுத்தம் வேண்டாம்.

    ReplyDelete
  13. சந்தித்துப்பேசிக் கைகுலுக்கி நடந்ததை மறக்கலாமே!

    ReplyDelete
  14. செளந்தர்,

    இந்த பதிவு உங்களுடைய முந்தய பதிவிற்கு பொறுப்புடன் பதிலளித்த என் போன்றவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கிறது...

    For your information, எங்களுக்கும் உள்குத்து போடத் தெரியும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...