கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 May, 2011

காலத்தோடு த்துபோவதில்லை வாழ்க்கை..!



காலத்தோடு ஒத்துபோவதில்லை
வாழ்க்கை..!

ழைவேண்டி தவம் கிடக்கும் மனசு
‌எந்த மனம் நனைந்து களிக்கிறது
மழை வந்தவுடன்..!

பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
பூத்துக் காய்த்தவுடன்
கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!

நாட்களின் நேரம்
ஒருவனுக்கு போதவில்லை
ஒருவனுக்கு ஓடவில்லை
இருவருக்கும் பயன்படாமல்
பயணப்படுகிறது கடிகார முட்கள்...!

சித்த போது கிடைக்காத உணவு
விருந்தாக வரும் 
விரும்பாதபோது..!

னிமைத்தேடி அலைவோம்
எங்கிருந்து விடும் 
நம் இதயத்தின் ஓலங்கள்..!

திர்ப்படும் அறிந்தமுகங்கள்
இன்பத்தைவிட இன்னல்களையே
அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!

னிமூட்டம் போல் 
வாழ்க்கையை மூடிக்கொண்டிருக்கிறது
அதற்கான போராட்டங்கள்..!

ணம்தேடும் வாழ்க்கையில்
முடிந்துப்போகிறது 
நம் பயணம்...!

நிகழ்கால வெப்பத்தில்...
நிக‌ழ்கால குளிரில்...
நிகழ்கால கதகதப்பில்
வாழவிரும்புவதில்லை எவரும்...

டி முடித்தப்பின் ஒவ்வொருவருக்கும்
மருந்தாகிறது மரணம்..
 
ண்மைதான்
வாழ்க்கை ஒருநாளும்
காலத்தோடு ஒத்துபோவதில்லை..!


கருத்திடுங்கள்..! வாக்களியுங்கள்...!
இந்த கவிதை உயிர்த்தெழும்...!

90 comments:

  1. இரண்டாவது சொட்டுத் தூறல்

    ReplyDelete
  2. எந்த மனம் நனைந்து களிக்கிறது
    மழை வந்தவுடன்..//

    இந்த வரிக் கோர்ப்பு... மிக டச்சிங்க் சகோ.

    மழையில் நனந்தால் காய்ச்சல் வரும் என்று என் அம்மா என்னைச்ச் சின்ன வயசு முதலே மழைக்குப் பயப்படும் வகையில் வளர்த்து வைச்சிருக்கிறா. இல்லேன்னா மழையில் நனைஞ்சு, லூட்டி அடிக்க மாட்டேனா.

    ReplyDelete
  3. அருமை அருமை
    காலமும் வாழ்க்கையும் எப்போதும் ஒத்துப்போகாது
    ஒன்றை ஒன்றுமுந்தத்தான் முயற்சி செய்து கொண்டுள்ளன
    எப்படியும் இறுதியில் காலம் வாழ்வை கடந்து போய்விடுகிறது
    காலம் நம்மை கடக்காத வரையில்
    வாழுபவர்களாய் இருக்கின்ற நாம்
    காலம் நம்மைவிட்டு கடந்தபின்
    காலமானவர்கள் ஆகிவிடுகிறோம்
    சிந்தையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
    தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்

    ReplyDelete
  4. பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!//

    இங்கே பூத்துக் காய்த்தவுடன், எனும் சொற்றொடரின் மூலம் பல பொருட்களில் அர்த்தம் தந்துள்ளீர்கள்.

    அதாவது பூவுக்கு மட்டுமல்ல, வளர்ந்து வரும் மனிதர்களையும் பிறர் கல்லெறிந்து காயப்படுத்தும் பல சம்பவங்களையும் இவ் வரிகள் தத்வார்த்த ரீதியில் விளம்பி நிற்கிறது.

    ReplyDelete
  5. சகோ, வாழ்க்கைச் சக்கரத்தின் பல படி நிலைகளை, இயற்கையோடு இணைத்து விளக்கியவாறு அருமையான கவிதையினைத் தந்துள்ளீர்கள். நன்றிகள் சகோ.

    ReplyDelete
  6. ////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    முதல் மழை
    ////

    வாங்க செந்தில்...

    ReplyDelete
  7. ///
    நிரூபன் said... [Reply to comment]

    இரண்டாவது சொட்டுத் தூறல்
    ////

    வாருங்கள் நனைவோம்..

    ReplyDelete
  8. //உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!//
    டச்சிங்!

    ReplyDelete
  9. /////
    நிரூபன் said... [Reply to comment]

    எந்த மனம் நனைந்து களிக்கிறது
    மழை வந்தவுடன்..//

    இந்த வரிக் கோர்ப்பு... மிக டச்சிங்க் சகோ.

    மழையில் நனந்தால் காய்ச்சல் வரும் என்று என் அம்மா என்னைச்ச் சின்ன வயசு முதலே மழைக்குப் பயப்படும் வகையில் வளர்த்து வைச்சிருக்கிறா. இல்லேன்னா மழையில் நனைஞ்சு, லூட்டி அடிக்க மாட்டேனா.
    //////


    மழையில் நனைவது தவறில்லை... அதை அனுபவித்து நனையவேண்டும்..

    ReplyDelete
  10. @Ramani

    தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா..

    ReplyDelete
  11. ////
    நிரூபன் said... [Reply to comment]

    பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!//

    இங்கே பூத்துக் காய்த்தவுடன், எனும் சொற்றொடரின் மூலம் பல பொருட்களில் அர்த்தம் தந்துள்ளீர்கள்.

    அதாவது பூவுக்கு மட்டுமல்ல, வளர்ந்து வரும் மனிதர்களையும் பிறர் கல்லெறிந்து காயப்படுத்தும் பல சம்பவங்களையும் இவ் வரிகள் தத்வார்த்த ரீதியில் விளம்பி நிற்கிறது.
    ///////////



    அர்த்தங்கள் நாம் பார்க்கும் கண்ணோட்டத்திலும் இருக்கிறது நண்பரே...

    ReplyDelete
  12. ////
    நிரூபன் said... [Reply to comment]

    சகோ, வாழ்க்கைச் சக்கரத்தின் பல படி நிலைகளை, இயற்கையோடு இணைத்து விளக்கியவாறு அருமையான கவிதையினைத் தந்துள்ளீர்கள். நன்றிகள் சகோ.
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  13. ////
    ஜீ... said... [Reply to comment]

    //உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!//
    டச்சிங்!
    ///////

    வாங்க ஜீ...

    ReplyDelete
  14. வாழ்க்கையின் முரண்பாடுகள்.

    ReplyDelete
  15. அந்த முரண்களை வெல்வதில் நம் திறன் இருக்கிறது.

    ReplyDelete
  16. ////
    FOOD said... [Reply to comment]

    வாழ்க்கையின் முரண்பாடுகள்.
    ....

    ஆம் தலைவரே..

    ReplyDelete
  17. ////
    FOOD said... [Reply to comment]

    அந்த முரண்களை வெல்வதில் நம் திறன் இருக்கிறது.
    ////

    உண்மைதான் முரண்பாடுகளை வெல்வோம்...

    ReplyDelete
  18. உண்மைதான் நண்பா தெளிந்த பார்வையுடன் கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
  19. //
    ஓடி முடித்தப்பின் ஒவ்வொரு வருக்கும்
    மருந்தா கிறது மரணம்..

    என்னை பாதித்த புது குறள்.....

    ReplyDelete
  20. தேவைபடும்போது கிடைக்காது. தேவை படாத போது கிடைக்கும். இதுவே வாழ்க்கை.

    ReplyDelete
  21. வாழ்க்கை போராட்டம்

    ReplyDelete
  22. நாட்களின் நேரம்
    ஒருவனுக்கு போதவில்லை
    ஒருவனுக்கு ஓடவில்லை
    இருவருக்கும் பயன்படாமல்
    பயணப்படுகிறது கடிகார முட்கள்...!அருமையான வரிகள்

    ReplyDelete
  23. பசித்த போது கிடைக்காத உணவு
    விருந்தாக வரும்
    விரும்பாதபோது..!

    எதார்த்தமான வரிகள்...

    ReplyDelete
  24. அருமை ...யதார்த்தம் பதார்த்தமாய் தெறிக்கும் வரிகள் நன்றி

    ReplyDelete
  25. எதிர்ப்படும் அறிந்தமுகங்கள்
    இன்பத்தைவிட இன்னல்களையே
    அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!>>>>>>>

    உண்மை தான் நண்பரே!

    ReplyDelete
  26. ஓடி முடித்தப்பின் ஒவ்வொருவருக்கும்
    மருந்தாகிறது மரணம்..

    உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!

    உண்மைதான் வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை...
    ஒவ்வொரு பத்தியும், கால மாற்றத்தை அழகாய் சித்தரித்த அனுபவ முத்துக்கள்....மிகவும் ரசித்தேன்...வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  27. வாழ்க்கை இப்படித்தான்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

    நாமே ராஜா, நமக்கே விருது-8
    http://speedsays.blogspot.com/2011/05/8.html

    ReplyDelete
  28. //பணம்தேடும் வாழ்க்கையில்
    முடிந்துப்போகிறது
    நம் பயணம்...!//

    உண்மை தான் நண்பா

    ReplyDelete
  29. #பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!#

    அருமை.... நண்பா...

    ReplyDelete
  30. காலத்தோடு ஒத்துப்போவதில்லை வாழ்க்கை. காலம்தான் தருகிறது ஒவ்வொருவரின் வாழ்வை..

    ReplyDelete
  31. மிகவும் அர்த்தம் பொதிந்த அனுபவபூர்வமான அழகிய கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  32. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    உண்மைதான் நண்பா தெளிந்த பார்வையுடன் கவிதைக்கு நன்றி!
    ////

    நன்றி விக்கி..

    ReplyDelete
  33. ///
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    //
    ஓடி முடித்தப்பின் ஒவ்வொரு வருக்கும்
    மருந்தா கிறது மரணம்..

    என்னை பாதித்த புது குறள்.....
    ////

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி ரமேஷ்

    ReplyDelete
  34. ////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    தேவைபடும்போது கிடைக்காது. தேவை படாத போது கிடைக்கும். இதுவே வாழ்க்கை.
    ////

    நன்றி தமிழ் உதயம்...

    ReplyDelete
  35. ///
    சங்கவி said... [Reply to comment]

    Very Nice Wordings....
    ////

    thanks

    ReplyDelete
  36. பசித்த போது கிடைக்காத உணவு

    விருந்தாக வரும் விரும்பாதபோது..!##அருமையான வரிகள்.நான் மிகவும் ரசித்தது.

    ReplyDelete
  37. பசித்த போது கிடைக்காத உணவு
    விருந்தாக வரும்
    விரும்பாதபோது..!///

    இதுதான் நிதர்சனம்...!!!

    ReplyDelete
  38. பணம்தேடும் வாழ்க்கையில்
    முடிந்துப்போகிறது
    நம் பயணம்...!//

    அசத்துறீரே கவிஞா....!!

    ReplyDelete
  39. உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!///

    கரிக்ட்டு மக்கா சூப்பர்...!!

    ReplyDelete
  40. வாழ்வியலின் தத்துவம் விபரமாக சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் சௌந்தர் !

    ReplyDelete
  41. ///
    koodal bala said... [Reply to comment]

    வாழ்க்கை போராட்டம்
    ///////

    தங்கள் கருத்துக்கு நன்றி பாலா..

    ReplyDelete
  42. ///
    ரேவா said... [Reply to comment]

    நாட்களின் நேரம்
    ஒருவனுக்கு போதவில்லை
    ஒருவனுக்கு ஓடவில்லை
    இருவருக்கும் பயன்படாமல்
    பயணப்படுகிறது கடிகார முட்கள்...!அருமையான வரிகள்
    /////

    நன்றி.. ரேவா...

    ReplyDelete
  43. ////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    அருமை ...யதார்த்தம் பதார்த்தமாய் தெறிக்கும் வரிகள் நன்றி
    /////

    நனறி ரியாஸ்...

    ReplyDelete
  44. ////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    எதிர்ப்படும் அறிந்தமுகங்கள்
    இன்பத்தைவிட இன்னல்களையே
    அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!>>>>>>>

    உண்மை தான் நண்பரே!
    ///////

    நன்றி பிரகாஷ்...

    ReplyDelete
  45. @ரேவா


    கவிதைகளில் பல்வேறு வரிகளை சுட்டிக்காட்டி விரிவான பின்னுட்டம் அளித்த தங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  46. /////
    Speed Master said... [Reply to comment]

    வாழ்க்கை இப்படித்தான்

    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  47. ////
    சசிகுமார் said... [Reply to comment]

    //பணம்தேடும் வாழ்க்கையில்
    முடிந்துப்போகிறது
    நம் பயணம்...!//

    உண்மை தான் நண்பா
    /////

    நன்றி சசி..

    ReplyDelete
  48. ///
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    #பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!#

    அருமை.... நண்பா...
    /////////

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  49. பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!உண்மை தான்

    ReplyDelete
  50. ///
    நபூ.சௌந்தர் said... [Reply to comment]

    காலத்தோடு ஒத்துப்போவதில்லை வாழ்க்கை. காலம்தான் தருகிறது ஒவ்வொருவரின் வாழ்வை..
    /////

    வலை உலகிற்க்கு தங்களை அன்போடு வரவேற்கிறேபம்..

    ReplyDelete
  51. ///
    வை.கோபாலகிருஷ்ணன் said... [Reply to comment]

    மிகவும் அர்த்தம் பொதிந்த அனுபவபூர்வமான அழகிய கவிதை. பாராட்டுக்கள்.
    ////

    நன்றி ஐயா...

    ReplyDelete
  52. ///
    முரளி நாராயண் said... [Reply to comment]

    பசித்த போது கிடைக்காத உணவு

    விருந்தாக வரும் விரும்பாதபோது..!##அருமையான வரிகள்.நான் மிகவும் ரசித்தது.
    /////

    நன்றி முரளி..

    ReplyDelete
  53. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    பசித்த போது கிடைக்காத உணவு
    விருந்தாக வரும்
    விரும்பாதபோது..!///

    இதுதான் நிதர்சனம்...!!!
    ///////

    உண்மைதான் நண்பரே..

    ReplyDelete
  54. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    பணம்தேடும் வாழ்க்கையில்
    முடிந்துப்போகிறது
    நம் பயணம்...!//

    அசத்துறீரே கவிஞா....!!
    /////


    உங்கள் ஆதரவுடன்தான் நண்பரே..

    ReplyDelete
  55. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!///

    கரிக்ட்டு மக்கா சூப்பர்...!!
    ////

    தங்கள் கருத்துக்கு நன்றி மக்கா...

    ReplyDelete
  56. ///
    ஹேமா said... [Reply to comment]

    வாழ்வியலின் தத்துவம் விபரமாக சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் சௌந்தர் !
    //////

    நன்றி ஹேமா...

    ReplyDelete
  57. ///
    போளூர் தயாநிதி said... [Reply to comment]

    பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!உண்மை தான்
    ///////


    நன்றி நண்பரே..

    ReplyDelete
  58. எதிர்ப்படும் அறிந்தமுகங்கள்
    இன்பத்தைவிட இன்னல்களையே
    அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!
    //
    கவி அரசே
    மிக அருமை
    ஒரு ஒரு வரிகளும்
    எதார்த்தமாய்
    அழுத்தமாய்
    வலிகளை
    சுமந்து
    வார்த்தை இல்லை பாராட்ட
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  59. உண்மைலேயே இவ்ளோ நாள் உங்க ப்ளோக்ல படிச்ச கவிதைகளில் இதுதான் என்னை ரொம்பக் கவர்ந்தது அண்ணா :-) சத்தியம் ரொம்ப எதார்த்தமாகவும் ரொம்ப ரசிக்கும்படியாகவும் இருந்துச்சு!
    அதிலும் // மழைவேண்டி தவம் கிடக்கும் மனசு
    ‌எந்த மனம் நனைந்து களிக்கிறது
    மழை வந்தவுடன்..!
    ///

    இந்த வரிகள் வாய்ப்பே இல்ல.. ரொம்ப அருமையா இருக்கு :-)

    ReplyDelete
  60. உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!//

    உண்மைதான்!உண்மைதான்!!

    ReplyDelete
  61. பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
    பூத்துக் காய்த்தவுடன்
    கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!

    உண்மைதான்! அருமையா சொல்லி இருக்கீங்க செளந்தர்! நீங்க சொல்றமாதிரி,

    காலத்தோடு ஒத்துபோவதில்லை வாழ்க்கை..!

    ReplyDelete
  62. நண்பரே அருமையாய் வரித்திருக்கிறீங்கள்.......
    அற்புதம்........

    ReplyDelete
  63. அதுதான் வாழ்க்கை

    ReplyDelete
  64. @siva


    தங்கள் பாராட்டுக்கு நன்றி சிவா...

    ReplyDelete
  65. /////
    யாதவன் said...

    அருமையான கவிதை//////

    நன்றி யாதவன்....

    ReplyDelete
  66. @கோமாளி செல்வா

    என்ன செல்வா ரொம்ப நாளா ஆனையே காணும்...

    இவ்வளவு புகழ்ந்துட்டே...

    உன்னுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி செல்வா...

    ReplyDelete
  67. காலத்தோடு ஒத்துப்போவதில்லை வாழ்க்கை???

    //மழைவேண்டி தவம் கிடக்கும் மனசு
    ‌எந்த மனம் நனைந்து களிக்கிறது
    மழை வந்தவுடன்..!//


    //எதிர்ப்படும் அறிந்தமுகங்கள்
    இன்பத்தைவிட இன்னல்களையே
    அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!//

    அனைத்துமே மனம் சம்பந்தப்பட்டது. ஒன்றை அடைந்தவுடன் நின்று நிதானித்து, போராடி அடைந்ததை ரசித்து அனுபவிக்க யாருக்கிங்கே நேரமும் மனமுமிருக்கிறது. அடுத்த இலக்கைத் தேடி ஓடுவதிலேயே வாழ்க்கை கழிகிறது. ஒருசிலர்தான் ஒவ்வொரு நொடியையும் இனிமையாய் ரசித்து அனுபவிப்பவர்களாய் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  68. //பணம்தேடும் வாழ்க்கையில்
    முடிந்துப்போகிறது
    நம் பயணம்...!

    நிகழ்கால வெப்பத்தில்...
    நிக‌ழ்கால குளிரில்...
    நிகழ்கால கதகதப்பில்
    வாழவிரும்புவதில்லை எவரும்...//

    உண்மையே. பேராசையும் இன்னும் இன்னும் என்று ஓடுவதுமே காலத்தோடு வாழ்க்கை ஒத்துப்போகாததுக்கு காரணம் என்பதை அழகான வரிகளில் சொன்னதுக்கு நன்றி தோழரே

    ReplyDelete
  69. /////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    உண்மைதான்
    வாழ்க்கை ஒருநாளும்
    காலத்தோடு ஒத்துபோவதில்லை..!//

    உண்மைதான்!உண்மைதான்!!
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி...!

    ReplyDelete
  70. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  71. ////
    vidivelli said... [Reply to comment]

    நண்பரே அருமையாய் வரித்திருக்கிறீங்கள்.......
    அற்புதம்........
    //////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  72. ரசித்தேன் வரிகளை ஆதங்கம் அனைத்தும் அடக்கமாகின்றன விடை கிடைப்பது என்றோ ....

    ReplyDelete
  73. சாரி பாஸ் லேட் ஆகிரிச்சோ??

    ReplyDelete
  74. நல்லா இருக்கு பாஸ் கவிதை..
    //பனிமூட்டம் போல்
    வாழ்க்கையை மூடிக்கொண்டிருக்கிறது
    அதற்கான போராட்டங்கள்..!
    //
    எனக்கு பிடிச்சது

    ReplyDelete
  75. அருமையான வரிகள்
    அது அமைந்த விதம் அற்புதம்

    ReplyDelete
  76. @கடம்பவன குயில்

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  77. ////
    தினேஷ்குமார் said... [Reply to comment]

    ரசித்தேன் வரிகளை ஆதங்கம் அனைத்தும் அடக்கமாகின்றன விடை கிடைப்பது என்றோ ....
    /////

    நன்றி தினேஷ்

    ReplyDelete
  78. ///
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    நல்லா இருக்கு பாஸ் கவிதை..
    //பனிமூட்டம் போல்
    வாழ்க்கையை மூடிக்கொண்டிருக்கிறது
    அதற்கான போராட்டங்கள்..!
    //
    எனக்கு பிடிச்சது
    ///

    லேட் ஆனாலும் நீங்க வந்ததுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  79. ///
    கலாநேசன் said... [Reply to comment]

    good one
    ////

    thanks

    ReplyDelete
  80. ////
    vijaykarthik said... [Reply to comment]

    அருமையான வரிகள்
    அது அமைந்த விதம் அற்புதம்
    ////

    thanks

    ReplyDelete
  81. சூப்பர் கவிதை நண்பா. நீங்க எழுதினதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இது தான்.

    ReplyDelete
  82. உயிர்த்தெழட்டும் உங்கள் கவிதை.ஒத்துப் போகாத வாழ்க்கைக்கு உயிரூட்டும் வரிகள் அருமை.

    ReplyDelete
  83. அன்பின் சௌந்தர் - வாழ்க்கை என்பதே எதிர்பார்ப்பது குறித்த நேரத்தில் கிடைக்காம்ல் - எதிர்பாராத நேரத்தில் கிடைப்பதுதான். என்ன செய்வது. இம்முறன்பாடுகளுக்கிடையேயும் நாம் வாழ்கிறோம். அதுதான் வாழ்க்கை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  84. ///
    N.H.பிரசாத் said... [Reply to comment]

    சூப்பர் கவிதை நண்பா. நீங்க எழுதினதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இது தான்.
    ///

    நன்றி பிரசாத்..

    ReplyDelete
  85. ///
    Murugeswari Rajavel said... [Reply to comment]

    உயிர்த்தெழட்டும் உங்கள் கவிதை.ஒத்துப் போகாத வாழ்க்கைக்கு உயிரூட்டும் வரிகள் அருமை.
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  86. ////
    cheena (சீனா) said... [Reply to comment]

    அன்பின் சௌந்தர் - வாழ்க்கை என்பதே எதிர்பார்ப்பது குறித்த நேரத்தில் கிடைக்காம்ல் - எதிர்பாராத நேரத்தில் கிடைப்பதுதான். என்ன செய்வது. இம்முறன்பாடுகளுக்கிடையேயும் நாம் வாழ்கிறோம். அதுதான் வாழ்க்கை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
    ////

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

    ReplyDelete
  87. நல்ல வாழ்க்கை
    மரணத்துடன் ஆரம்பிக்கும்..
    மரணத்திற்கு பின்பும்
    வாழவைக்கும்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...